3/23/2014

| |

ஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்குமாறு மிரட்டிய புலிப் பினாமிகள்.

ஐ.நா வின் அமர்வுகள்,அமர்க்களங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக் கின்றது.நேற்றைய அமர்வு ஒன்றில் இந்து-பௌத்த சங்கத்தினர் இலங்கையில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்து என்பதையும் சுமார் 2 தசாப்தங்கள் புலிகளுக்காக தம்மை அர்ப்பணித்திருந்து நடுத்தெருவில் விடப்பட்டு வன்னியில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் தமிழ் பெண் ஒருத்தியின் வாக்குமூலமாக காணஒளியில் விளக்கியுள்ளனர். இக்காண ஒளி விளக்கத்தின் பின்னர் இந்து-பௌத்த சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் (சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாக கொண்ட ஈசன் என பலராலும் அறியப்பட்டவர்) விரிவான உரை ஒன்றை தமிழில் ஆற்றியிருக்கின்றார்.
இவ்வுரையை செவிமடுத்துக்கொண்டிருந்தவர்களில் மனித உரிமை எனும் போலிப்போர்வைக்குள் ஒழிந்திருக்கும் கி.கிருபாகரனும் அடங்கியுள்ளார். உரை முடிவில் ஈசனை சந்தித்த கிருபாகரன்„நீர் ஐ.நா வில் பேச வருவதானால் ஆங்கிலம் படித்துவிட்டுத்தான் வரவேண்டும்’ என மிரட்டியிருக் கின்றார். தமிழில் பேசியதற்காக தமிழன் ஒருவனை கிருபாகரன் மனித (புலிப்பாசிச) நேயப்பணியாளர் என்ற போர்வையில் மிரட்டியிருக்கின்றார் என்றார் இவர் மனித நேயத்தை அளவீடு செய்யும் அலகு பாசிசம் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இன்னும் இலகுவாக சொல்வதானால் பாசிசத்தை நேசித்தல் மனிதநேயம் – எதிர்த்தல் மனித உரிமை மீறல் என்பதே கிருபாகரனின் மனித நேயம்.