4/23/2014

| |

இப்போதாவது புத்தி வந்ததே

 வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்தலைமையாகப் பங்குபற்றும் முதலாவது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (21) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. 

வடமாகாண சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்குபற்றும் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது. 

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், மதியாபரணம் சுமந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண மீன்பிடி உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.