5/31/2014

| |

மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு

DSC09651மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவையொட்டிய கிழக்கு மாகாணம் தழுவிய வாகன பவணி வியாழக்கிழமை(29.5.2014)காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இதையொட்டிய வைபவம் மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் வளாகத்தில் நடை பெற்று பின்னர் ஊர்வலமாக அதிதிகள் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் ஸ்த்தாபகர் அருட்தந்தை வில்லியம் ஓள்ட் அவர்களின் உருவச்சிலைக்கு பாடசாலையின் தற்போதைய அதபர் மற்றும் முன்னாள் அதிபர்கள் மலர் மாலை அணிவித்தனர்.
கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மற்றும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருன் தம்பிமுத்து உட்பட சமய பிரமுகர்கள் முக்கியஸ்த்தர்கள் கல்வியலாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வாகன பவணி இன்று திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பின்னர் 31ம் திகதி ஜுன் மாதம் 2ம் திகதி வரைக்கும் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் வரைக்கும் செல்லவுள்ளது.