5/01/2014

| |

ரணில் மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு நாட்டுக்கெதிராக செயல்படுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 21 ஆவது நினைவு தினம் இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 21 ஆவது நினைவு தினம் 


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 21 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கொழும்பு புதுக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு அருகில் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் மகா சங்கத்தினர்,  அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ
சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்து:-
“ஒரு இனத்திற்கு, ஒரு மதத்திற்கு, ஒரு குலத்தினருக்கு, ஒரு தரப்பினருக்கு தேசப்பற்று மட்டுப்படுத்தப்படவில்லை. பிரேமதாஸவின் தேப்பற்று நாட்டின் இறைமையை பாதுகாத்தது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. இன்று நாடு சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளது. ஜனநாயக முறையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், நிமிர்ந்து நிற்பதற்கும் எமக்கு முதுகெழும்பு இருக்க வேண்டும். தோல்வியடையாத ஐக்கியதேசியக் கட்சியொன்றை, மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியொன்றை அரச அதிகாரத்தை மக்கள் சேவையாக மாற்றுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது.”