உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

5/01/2014

| |

மட்டகளப்பு கூட்டமைப்பில் மே தின நிகழ்வுகள் நடத்துவதில் குழப்பம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் மேதின நிகழ்வுகளை குழப்பும் வகையிலும் நிகழ்வுக்கு வருகை தருவோரை திசை திருப்பும் வகையிலும் தமிழ்  தேசிய கூட்டமைப்பின் துண்டுபிரசுரங்களையொத்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு நகரில் ஒட்டப்பட்டிருந்ததுடன் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீசப்பட்டிருந்தது. 
 
இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு சார்ல்ஸ் மண்டபத்தில் மேதின நிகழ்வுகள் நடைபெற்றன. 
 
இந்த நிலையில் நேற்று   புதன்கிழமை இரவு நிகழ்வு  நடைபெறும் மற்றும் நகர்ப்பகுதிகளில் இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது. 
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு மேதினத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அதே போன்றதான  துண்டுப்பிரசுரமே இவ்வாறு  அதிருப்தி குழுவினரால் வெளியிடப்பட்டிருந்தது. 
 
 
அதில் மேதின நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடப்பட்டிருந்தது.