6/27/2014

| |

37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு விழாவும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் 37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் அதிபர் க.சாந்தலிங்கம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய,தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்படவிருந்த புதிய கட்டடத்திற்கான அடிகல் நாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த புதிய கட்டடத்தினை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க திறந்து வைத்தார். பின்னர் மங்கல விளகேற்றல் இடம் பெற்று மாணவிகளால் தேவாரம் பாடப்பட்டது.
வரவேற்பு உரையினை பிரதி அதிபர் ச.மணிவாசகன் நிகழ்த்தினார் பின்னர் தலைமை உரையினை அதிபர் க.சாந்தலிங்கம் நிகழ்த்தினார்.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன், விசேட அதிதியாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.நித்தியானந்தன், ஆர்.கிருஸ்ணதாசன் (பாடசாலை வேலைகள்-பொறியலாளர்) மற்றும் ப.பாலச்சந்திரன்(கோட்டக் கல்வி பணிப்பாளர்-போரதீவுப்பற்று) மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.