7/17/2014

| |

கறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இரண்டுமாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டுமாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.கடந்த காலத்தில் மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்ட இந்த பாடசாலையின் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் அதில் இருந்தே மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.
 
இது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து இந்த பாடசாலையில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக 75 இலட்சம் ரூபா முதல் கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில் அமைக்கப்படவுள்ள சகல வசதிகளையும் கொண்ட இரண்டுமாடி வகுப்பறைக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலை அதிபர் சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
 
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.