8/13/2014

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங்கக் கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங்கப் பிரதிநிதிகளுக்கான விஷேட கூட்டம் எதிர்வரும் 16.08.2014ம் திகதி த.ம.வி.பு கட்சியின் மட்டக்களப்பு தலைமைச் செயலகத்தில் கட்சியின் தொழிற் சங்கத் தவைர் தலைமையில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் இடமாற்றம் மற்றும் சமகால நடைமுறைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும், இக் கலந்துரையாடலில் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் விஷேட அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.