உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/26/2014

| |

"மனிதாபிமானம்"ஓவிய கண்காட்சி -பாரிஸ்

 "மனிதாபிமானம்"ஓவிய கண்காட்சி -பாரிஸ்


பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரிசில்  "மனிதாபிமானம்"எனும் தலைப்பிலமைந்த  தேவதாசனின் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.  கடந்த நான்காம் திகதியிலிருந்து இம்மாதம் 22ம் திகதி வரை இடம்பெற்ற கண்காட்சியின் இறுதிநாளான வெள்ளியன்று பார்வையாளர்களின் ஒன்று கூடலும்  விமர்சன கலந்துரையாடலும் நடைபெற்றது.தேவதாசன் ஓவியத்துறையில்  மட்டுமன்றி எழுத்தாளராகவும், நடிகராகவும் புகலிட இலக்கியசூழலில் நன்கே அறியப்பட்டவராவார்.

1980களில் பிரான்சிலிருந்து வெளியான தமிழ் முரசு இதழ்தொடங்கி எக்ஸில் வரையான பல மாற்று  சஞ்சிகைகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.புகலிட இலக்கிய சஞ்சிகைகளான புன்னகை,அநிச்சை போன்றவற்றின் ஆசிரியராகவும் தேவதாஸ் செயல்பட்டவராவார்.பாரிஸ்-10ல் அமைந்துள்ள "சலோன் இந்தியன்"மண்டபத்தில்  இறுதி நாளன்று இடம்பெற்ற ஒன்று கூடலில் பிரான்சின் தமிழ் இலக்கிய,அரசியல் துறைசார்ந்த பலரும்  பங்கெடுத்தனர்.
Photo de Archuny Theva.அங்கு இடம்பெற்ற விமர்சனங்கள் கலந்துரையாடல்களாக  மாறி ஓவியங்களின் தன்மைகள்,நவீன ஓவியங்கள். சர்ரியலிசம். டாடாயிசம்.  இலங்கை இந்திய ஓவியங்கள். எல்லோராசிகிரியாஓவியங்களின்அழியா புகழ்கள்.என்றுஆரோக்கியமான விவாதமாக அன்றைய மாலைப்பொழுது கழிந்தது.