8/09/2014

| |

நாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை தரும் நிறுவகம்

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின்
நாடகச் செயல்பாடுகள் கவனத்தைக் கவருகின்றன.
இந் நிறுவகம் 2002இல் கிழக்கு பல்கலைக் கழகத்துடன்
இணைக்கப்பட்ட சுதந்திர நிறுவனமாகச் செயல் பட ஆரம்பிக்கிறது
.இசை,நடனம்,நாடகம்,ஓவியம்,சிற்பம்
ஆகியபாடநெறிகளை இங்கு ஆரம்பிக்க பல்கலைக்கழக ஆணைக்குழு அனுமதி தருகிறது.
நாடகமும்அரங்கியலும் எனும் பாடம் செய்முறையைப் பிரதானமாகக் கொண்ட பாடமாக இங்கு வடிவமைக்கப் படுகிறது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும்.கிழக்குப் பல்கலைக் கழகத்திலும்
கற்றுக்கொண்ட சாதகமான பாதகமான அனுபவங்களும் பாடங்களும்
இப் பாடத் திட்டத்தை வடிவமைக்கப் பெரும் துணை புரிந்தன.
உலக நாடாகப் போக்குகளுக்கும்
உள்ளூர் நாடாகப் போக்குகளுக்கும்
மாணவர்கள் பரிட்சயப் படுவதுடன்
உடல்
,குரல்
கற்பனைக்கான பயிற்சிகளோடு
ஒப்பனை
ஒளி அமைப்பு,
இசை அமைப்பு,
தயாரிப்பு.
விளம்பரம்ஆகியவற்றிலும்
மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன
.நாடகமும் அரங்கியலும் பயில ஒவ்வொரு வருடமும்50 மாணவர்களுக்குக் குறையாமல் பல்கலைக்கழக மானியஆணைக்குழுஅனுப்பி வைக்கிறது
.நாடகமும்அரங்கியலும் பயிலும் மாணவர்கள் நான்கு வருடங்கள் இந் நெறியைப் பயிலுகின்றார்கள்.
ஏறாத்தாள 200 மாணவர்கள் நாடகமும் அரங்கியலை இங்கு வருடம் தோறும் பயிலுகின்றார்கள்.
கூத்‌தின்அடிப்படைகளும் நவீன நாடகத்தின் அடிப்படைகளும்அவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன.
மூன்றாம்வருடத்தில்பயிலும் மாணவர்கள்
நெறியாள்கை,
தயாரிப்பு போன்ற
பாடங்களில்புள்ளிகள் பெற வேண்டுமாயின்
15 நிமிடத்த்துக்குக் குறையாமல் குறு நாடகம் ஒன்றைத் தயாரித்து நெறியாள்கை செய்து அளிக்க வேண்டும்
. இவ்வகையில் 40 குறு நாடகங்கள் வருடம்தோறும் இங்கு மேடையேறுகின்றன.
அம்மேடையேற்றம் ஒரு விழாவாக நடைபெறுகின்றது
நான்காம் வருடத்தில் கற்கும் மாணவர்கள் பத்துப் பத்துப்பேர் கொண்ட
நான்கு குழுக்களாகப் பிரிந்து 4 முழு நீள நாடகங்களை நாடாக விதிகளுக்கு அமைய அளிக்க வேண்டும்
இவ்வகையில் வருடம்தோறும்
குறு நாடகங்களாகவும்
பெருநாடகங்களாகவும்
44 நாடகங்கள் மேடையிடப் படுகின்றன.
இம்மரபு 2010 இலிருந்து ஆர்ம்பித்தது.
இதுவரை 120 க்குக் குறையாத சிறு நாடகங்களும் பெருநாடகங்களும் மேடைஏறியுள்ளன
இந்நாடகங்களில் நாடகமும் அரங்கியலைஒரு பாடமாகப் பயிலும்
மாணவர்கள் போட்டி நோக்கோடும் பரீட்சை நோக்கோடும் தீவிர பங்கு கொள்கிறார்கள்
நடிகர்களாக
காட்சிவிதானிப்பாளர்களாக,
இசையமைப்பாளர்களாக,
ஒளிஅமைப்பாளர்களாக,
மேடைமுகாமையாளர்களாக,
தத்தம்அளவில் பங்கு ஏற்று பயிற்சிபெறுகிறார்கள்.
இசைபிரிவும்,ஓவியப்பிரிவும்,நடனப்பிரிவும் இங்கு உள்ளதால்
நாடக மாணவர்கள் இசை,நடன,ஓவியாமாணவர்களின் உதவிகளைப் பெறுகிறார்கள்.
பல திறமைகளும் இங்கேஒன்றிணைகின்றன,
இப்பெரும் போக்கிலிருந்து
புதிய நாடாக நெறியாளர்களும்,
நாடாக எழுத்தாளர்களும்உருவாகுவார்கள் என்ற நம்பிக்கையை அண்மைக்காலமாக அங்கு மேடையிடப்படும் நாடகங்கள் தருகின்றன.
2014ஆம் ஆண்டுக்குரிய குறு நாடகங்களுக்கான பரீட்சையில் மேடையேறிய நாடகங்களிலிருந்து சில காட்சிகள்இவை
மௌனகுரு( நன்றி முகனூல் )