9/27/2014

| |

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பையும் தண்டனையும் நீதிபதி மைக்கேல் குன்ஹா இன்று மாலை அறிவித்தார்.
வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவருடையத் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.