9/13/2014

| |

கிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்

கிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்   பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அபிவிருத்தி குழுத்தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டிருப்பதை காணலாம். 
 
நடைபெற்ற அபிவிருத்திக்கூட்டத்தில் கடந்த கால நிகழ்கால பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கிராமத்துக்கொரு வேலைத்திட்டம், கிராமிய பாடசாலைகள் அபிவிருத்தி, பண்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத்திட்டம், விசேட செயற்திட்டமான (i,ii) மலசல கூடம் மற்றும் குடிநீர், நடைபெற்று முடிவடைந்த அபிவிருத்தி, நடைபெற்றுக்கொண்டிக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.