உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/15/2014

| |

மட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு புதிதாக இடைக்கால நிருவாகம் தெரிவு

புதிய இடைக்கால நிருவாக சபையின் தலைவராக பாடுமீன் பொழுது போக்குக் கழகத் தலைவர் எஸ்.உதயராஜ் , உப தலைவராக மைக்கல் மேன் கழக பிரதிநிதி ஏ.ஜோசப் செயலாளராக ரெட்ணம் கழக பிரதிநிதி ரி.காந்தன் , உப செயலாளராக சண் பிளவர் கழக பிரதிநிதி ஐ.செல்வக்குமார் பொருளாளராக யங்ஸ்டார் கழகத் தலைவர் எஸ்.நவநேசராஜா , நிருவாக உறுப்பினர்களாக கோல்ட் பிஸ் கழக பிரதிநிதி என்.சுதன் கோட்டைமுனை கழக பிரதிநிதி ஏ.திவாகரன்  தெரிவு செய்யப்பட்டனர்.
 
இப்புதிய இடைக்கால நிருவாகத்தினர் ஏற்கெனவே இருந்த நிருவாக சபையினரிடமிருந்து சங்கத்தின் உடமைகளையும், ஆவணங்களையும் பெற்றுக் கொள்வதெனவும், இந்த இடைக்கால நிருவாகத் தெரிவு சம்பந்தமாக இலங்கை கால்ப்பந்தாட்டச் சம்மேளனத்திற்கு உரிய வகையில் அறிவிப்பதெனவும், தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டச் சங்கத்திலிருந்து காத்தான்குடி, கல்குடா பகுதி கழகங்கள் தனியான சங்கங்களை அமைத்துள்ள நிலையில் மிகுதியாக உள்ள கழகங்கள் எதிர்வரும் 30.09.2014 ஆந் திகதிக்கிடையில் கழகப் பதிவினை புதுப்பித்துக்;கொள்வதெனவும் அதற்கிணங்க எதிர்வரும் 19.10.2014 ஆந் திகதி வருடாந்தப் பொதுக் கூட்டத்தை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கால எல்லைக்குள் இடைக்கால நிருவாகத்தின் ஏற்பாட்டில் ஏ பிரிவு, வி.பிரிவு அணிகளுக்கான விசேட நொக்கவுட் சுற்றுப் போட்டிகளை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது