9/21/2014

| |

கிரான்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரதான வீதியில் மக்கள் வீதியை மறித்து இன்று (20.9.2014) காலை 9மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 16.9.2014 அன்று அதிகாலை கிரான்குளம் சந்தியில் நடந்த வாக விபத்திற்கு காரணமான வேன் சாரதியை கைது செய்ய வேண்டும், குறித்த வேன் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த வருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியை மறித்து வீதியில் பெருமளவிளான ஆண்கள் பெண்கள் பொதுமக்கள் அமர்ந்திருந்தும் சுலோகங்களை தாங்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் போக்கு வரத்துக்கு தடை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிசார் அங்கு விரைந்து நிலைமைய சீர் செய்த பின்னர் வாகனப் போக்கு வரத்து இடம் பெற்றது.
ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குறித்த வித்துக்கு காரணமாக இருந்த சாரதியை கைது செய்ததாகவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு குறித்த சாரதியை உட்படுத்தியதாகவும் பின்னர் நீதிமன்றத்தினால் அசந்தேக நபருக்க பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இது தொடர்பில் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர்.
எனினும் குறித்த சந்தேக நபரான வேன் சாரதியை மீண்டும் கைது செய்து நீதிமன்ற சட்ட நடவடிக்கை தான் உட்டுத்துவதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொடுத்த வாக்குறுதியை யடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
கடந்த 16.9.2014 அன்று அதிகாலை 1மணியளவில் கிரான்குளம் சந்தியில் பேசிக்கொண்டு நின்ற இளைஞர்கள் மீது மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்ற வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேசிக் கொண்டு நின்றவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்திருந்தனர்.
உயிரிழந்தவர் கிரான் குளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
SAM_0513