9/23/2014

| |

யாழ்.மண்ணைத் தொட்டது யாழ்தேவி

யாழ்ப்பாணத்துக்கான பரீட்சார்த்த ரயில் சேவை நேற்று திங்கட்கிழமை பளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது.
பளை ரயில் நிலையத்திலிருந்து நேற்று மு.ப. 11.00 மணிக்கு புறப்பட்ட யாழ். தேவி ரயில் 15 நிமிட நேரத்தில் யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
இந்த பரீட்சார்த்த ரயில் சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் நேற்று ஆரம்பித்து வைத்தனர்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் புகையிரத சேவை திணைக்கள பணிப்பாளர், முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண பிரதம செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல். இளங்கோவன் உள் ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர்.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி யாழ் நகருக்கு யாழ். தேவி புகையிரத சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.