9/18/2014

| |

இந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின: நாளை பேச்சுவார்த்தை

இந்தியா சீனா இடையே மூன்று ஒப்பந்தங்கள் அகமதாபத்தில் கையெழுத்தானது.
 சீன அதிபர் ஜி ஜிங்பிங், தனது மனைவி மற்றும் 150 பேர் கொண்ட குழுவினருடன், மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காகவும், குஜராத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அவர் சீனாவில் இருந்து நேராடியாக ஆகமதாபாத் வந்தடைந்தார்.
 அகமதாபாத் நகருக்கு இன்று பிற்பகல் வந்தடைந்த ஜி ஜிங்பிங் குழுவினரை குஜராத் முதல்வர் ஆனந்திபென், கவர்னர் ஓம்பிரகாஷ் கோலி ஆகியோர் வரவேற்றனர். மேலும் ஜி ஜிங்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
 பின்னர் ஓட்டலுக்கு சென்ற அவர்களை பிரதமர் மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து இந்தியா சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆமதாபாத் மற்றும் குவாங்சூ இடையே கலாச்சார பரிமாற்றம், குஜராத்தில் தொழில்பூங்காக்கள் அமைப்பது, குவாங்டாங் குஜராத் இடையேயான தொழில் ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று 3 ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கும் கையெழுத்திட்டனர்.
இன்று இரவு சீனஅதிபர் ஜி ஜின்பிங்க்கு சபர்மதி நதிக்கரையில் உள்ள ஸ்விஸ் டெண்ட்டில் பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் 150க்கும் மேற்பட்ட குஜராத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. பிரதமரின் தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இரு தரப்பிலும் மிகவும் முக்கியமான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாம்.. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் நாளை தில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.