9/17/2014

| |

வாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்வாகரைப் பிரதேசத்தில் தங்போது இடம் பெற்று வரும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் தங்போதைய நிலை குறித்த மீளாய்வுக் கூட்டம் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் 16.09.2014 ம் திகதி வாகரைப் பிரதேச செயகத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் வாகரைப் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது. அக் கூட்டத்தில் வாகரைப் பிரதேச பிரதேச செயலாளர் ராகுலநாயகி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இணைப்பாளர் ப. தவேந்திர்ராஜா ,ஆ.தேவராஜாமற்றும் வாகரைப் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், கிராம அபிவிருத்திந் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் உள்ளீட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது