9/20/2014

| |

காஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜp ஜpன்பிங் இடையே நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து, காஷ் மீரின் சுமர் பகுதியில் நுழைந்த இராணுவத்தினரை சீனா உடனடி யாக திரும்ப அழைத்தது. காஷ் மீரின் சுமர் எல்லை பகுதியில் சீன இராணுவத்தினர் நேற்று முன்தினம் காலை அதிகளவில் ஊடுருவினர். அங்கிருந்த இந்திய இராணுவத் தினரை வெளியேறும்படி அவர்கள்; எச்சரிக்கை விடுத்தனர்.
இரு நாட்டு இராணுவத்தினரும் 200 மீட்டர் இடைவெளியில் அணி வகுத்து நின்றனர். இருதரப்பு இராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் பலன் அளிக்க வில்லை. சீன அதிபர் ஜpன்பிங்குடன் டெல்லியில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி இது குறித்து கவலை தெரிவித்தார்.
எல்லைக் கோடு வரையறுக்கப்படாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இருநாட்டு இராணுவத்தினருக்கும் வழிமுறைகள் உள்ளதாகவும் ஜpன் பிங் தெரிவித்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லீ தலைநகர் பீஜpங்கில் நேற்று முன் தினம் அளித்த பேட்டியில் கூறியதா வது: எல்லையில் நடந்த சம்பவத் துக்கு சீனாவும் இந்தியாவும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன. உடனடி உத்தரவு மூலம் அங்கு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நிலவுகிறது.
பேச்சுவார் த்தை மூலம் எல்லையில் நீண்ட காலமாக அமைதி பின்பற்றப்படு கிறது. சீன அதிபரின் இந்திய பய ணம் முழு வெற்றி அடைந்ததாக நம்புகிறோம்.
இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு புதிய நிலைக்கு செல் லும்.