9/21/2014

| |

முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்திப் பாதையில் முனைக்காடு.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் பட்டிப்பளை பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடுக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார மீள் சுழற்சிக் கடன் திட்டத்தினை மேற்கொள்வதற்கான நிதியுதவி 20.09.2014ம் திகதி முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தனினால் வழங்கப்படது
 
நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாகவே இவ் வாழ்வாதாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதற்காக ஒரு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கத்திற்கு ரூபா 10,00000 இலட்சம் முறையில் 40,00000 ரூபாவினை வழங்குவதாகவும் இத் திட்டத்தின் பயனாளிகளாக பெண்கள் தலைமை தங்கும் குடும்பங்கள், குடும்ப எண்ணிக்கை அதிகமாக காணப்படும் குடும்பங்கள், வலது குறைந்தவர்கள் காணப்படும் குடும்பங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் முனைக்காட்டுக் கிராமம் ஓர் முன்மாதிரியான கிராமமாக வர வேண்டும். அவ்வாறு வருவதற்கான  முதற்கட்ட வேலைத்திட்டமாகவே தாம் இதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்தார்