9/05/2014

| |

ரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாடு ஆரம்பம்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா வுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிக்கட்டும் வகையில் நேட்டோ அங்கத்துவ நாடுகளின் இரண்டு நாள் மாநாடு பிரிட்டனின் வேல்ஸ் நகரில் நேற்று ஆரம்பமானது.
உக்ரைன் விவகாரம் மற்றும் சிரியா, ஈராக்கில் புதிய அச்சு றுத்தலாக உள்ள இஸ்லாமிய தேசம் அமைப்பு தொடர்பில் நேட்டோ மாநாட்டில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான தலையீடு பனிப் போருக்கு பின்னர் மிக மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என நேட்டோ தலைவர் அன்டர்ஸ் ரஸ்முஸன் எச்சரித்திருந்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரை னுக்கு ஒன்றிணைந்து ஆதர வளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் டைம்ஸ் பத்திரிகைக்கு வெளியிட்ட ஒன்றி ணைந்த அறிவிப்பில் உறுதி அளித்திருந்தனர். "கிரிமியாவை தனது நிலப்பகுதிக்குள் உள் வாங்கிக் கொண்டதன் மூலம் ரஷ்யா சட்டப்புத்தகத்தை கிழித் தெறிந்தது.
அதனது துருப்புகள் உக்ரைன் மண்ணில் நின்று தேசத்தின் இறை மைக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது" என்று இரு நாட்டு தலைவர்களது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"உக்ரைனின் ஜனநாயக எதிர் காலத்தை தீர்மானிக்கும் உரி மைக்கு நாம் ஆதரவளிப்பதோடு உக்ரைனியர்களின் திறனை மேம் படுத்த நாம் தொடர்ந்தும் உதவு வோம்" என்றும் ஒபாமா, கெமரூன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உக்ரைனுக்கு ஆதர வளிக்கும் வகையில் அந்;நாட்டு ஜனாதிபதி பெட்ரோ பொரொ n'ன்கோவை நேட்டோ தலை வர்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தனர். இந்த சந்திப்பு உக்ரைனின் இறை மைக்கு வழங்கும் ஆதரவு மற்றும் ரஷ்ய யுத்த சூழலில் அதன் மீதான பொறுப்பு பற்றி தெளிவான செய் தியை வழங்குகிறது என்று பிரிட்டன் அரச வட்டாரங்கள் குறிப் பிட்டுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக நிதி வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் துருப்புகளுக்கும் கிளர் ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் சுமார் 2600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் ரஷ்ய கிளர்ச்சியாளர் களுக்கு ஆயுத உதவி மற்றும் பயிற்சிகளை வழங்கு வதாக மேற்குலகம் குற்றம் சாட்டுகிறது.
எனினும் இதனை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த மோதல் காரணமாக கிழக்கு உக்ரைனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது.
இதேவேளை நேட்டோவில் உக் ரைனுக்கு அங்கத்துவம் வழங்கக் கூடாது என்று எச்சரித்திருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கை லவ்ரோவ், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மீதான தனது குறிக்கோளை திணிக்க முயலக்கூடாது என்று அமெரிக் காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதில் உக்ரைன் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வகுத்த அமைதி செயற்பாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கோரிய லவ்ரோவ் அப்படி இல்லாவிட்டால் ஐரோப்பாவின் மையப்பகுதியில் பாரிய யுத்தம் வெடிக்கும் என்று எச்சரித்தார்.
புடின் உக்ரைன் அமைதி குறித்து ஏழு அம்ச திட்டத்தை கடந்த புதன் கிழமை வெளியிட்டிருந்தார். எனினும் இதனை உக்ரைன் அரசு நிரா கரித்தது.
"பிரச்சினையை தீர்ப்பதற்கு சாதகமான சூழல் இருக்கும் நிலை யில் உக்ரைன் அரசின் ஒரு பகுதியினர் அதனது அணிசேரா அந்தஸ்தில் இருந்து விலகி நேட்டோவில் இணைய முயற் சிக்கிறது" என்று லவ்ரோ குற்றம் சுமத்தினார்.
உக்ரைன் நேட்டோ அங்கத்துவம் பெறுவது தனது தேசிய பாது காப்பிற்கு அச்சுறுத்தல் என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
இதில் உக்ரைன் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் குறித்து சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்ட லவ்ரோவ், "துரதிஷ்டவசமாக அதிக தாக்கம் செலுத்தும் அமெரிக்கா உட்பட ஒருசில எமது மேற்குலக நட்பு நாடுகள் நேட்டோவை வெற்றிபெறச் செய்வது மற்றும் அமெரிக்கா தனது குறுக்கோளை உலகெங்கும் நிலைநிறுத்த முயற்சிக்கிறது" என்றார்.
உக்ரைன் பிரச்சினையையொட்டி கிழக்கு ஐரோப்பாவின் தனது அங்கத்துவ நாடுகளில் அதிர டிப்படை ஒன்றை நிறுவும் நேட்டோவின் திட்டத்திற்கு வேல்ஸ் மாநாட்டில் அங்கீகாரம் வழங் கப்படும் எனவும் எதிர்பார்க் கப்படுகிறது.