உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/26/2014

| |

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக்கூட்டம்மண்முனை வடக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக்கூட்டம் 25.09.2014 இன்று பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவரும்,ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் முதலமைச்சரும் ஆகிய சி.சந்திரகாந்தன் தலைமையில் மண்முனை வடக்கு “டேபா” மண்டபத்தில்  பிரதேச செயலாளர் ஏ. தவராஜாவின் வரவேற்புரையுடன் நடைபெற்றது
இங்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமான நிதி ஒதுக்கீடுகளின் வேலைத்திட்டத்தின் நடைமுறைகள்,பாடசாலை அபிவிருத்திச்செயற்பாடுகள் ,வாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.இந்நிகழ்வில் முன்னாள் மகாணசபைஉறுப்பினர் பூ.பிரசாந்தன், பொருளாதார அபிவிருத்தி இணைப்பாளர்களும்,கிராமசேவகர்களும்,வாழ்வின் எழுச்சித்திட்ட அதிகாரிகளும் ,திணைக்கள தலைவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.