9/08/2014

| |

இலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

ஜப்பானியப் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதிஇலங்கை வந்துள்ள ஜப்பானியப் பிரதமர் ஷிண்ஸோ அபேவுக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து இருநாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கடல் வழி வர்த்தகத்தில் இலங்கை ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் சர்வதேச நிதி உதவிகள் மூலம் இலங்கையில் சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ஜப்பானியப் பிரதமருக்கு இக்கூட்டறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கையில் தொழில்துறையிலும், உள்நாட்டுக் கட்டமைப்பிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கூடுதலான முதலீடுகளை செய்ய ஜப்பான் சம்மதம் தெரிவித்துள்ளது.