9/23/2014

| |

அரசடித்தீவு அணி சம்பியனானதுகுருந்தையடி ரென்ஸ்ரார்  விளையாட்டுக்கழகம் நடத்திய மபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு அரசடித்தீவு விக்நேஸ்வரா விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
 
குருந்தையடி ரென்ஸ்ரார்  விளையாட்டுக்கழகம் வருடாந்தம் இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடத்திவருகின்றது.
இந்த சுற்றுப்போட்டியானது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை  
குருந்தையடி ரென்ஸ்ரார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
 
இறுதிப்போட்டியில் மகிழடித்தீவு விளையாட்டுக்கழகமும் அரசடித்தீவு விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
இறுதிப்போட்டி நிகழ்வானது குருந்தையடி ரென்ஸ்ரார்  விளையாட்டுக்கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.