9/07/2014

| |

இ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமிழரசு கட்சியினரிடையே அதிருப்திநிலைஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
இதுவரையில் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியன்று ஆரம்பமாகிய தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மூன்று நாள் தேசிய மாநாட்டின் செயற்குழுவில் முதலில் மாவை சேனாதிராஜா தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து இரண்டாவது நாள் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் அதற்கன அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர் அதிகாரபூர்வமாக தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக இ.துரைராஜசிங்கம் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
செயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவைத் தெரிவு செய்வதற்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் கொண்டிருந்த  போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்திற்கமைவாக இ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மட்டகளப்பு தமிழரசு கட்சியினரிடையே அதிருப்திநிலை காணப்படுகின்றது.