உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/15/2014

| |

நான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்

வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது...கனடாவின் தெற்கு ஒன்றாரியோ மாநில Mississauga மாநகர சபை மேயர் பதவிக்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் திருமதி Bonni Crombie இத்தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இலங்கையின் மட்டக்களப்பை தான் தத்தெடுக்கப்போவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
Mississauga நகரில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் மேற்கொண்ட பிரச்சாரங்களின் போதே மட்டக்களப்பைத் தத்தெடுப்பது என்ற வாக்குறுதி அவரால் வழங்கப்பட்டது.
Bonni Crombie கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், மாநகரசபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இதன் அடிப்படையில் மாநகர மேயராகப் பதவி வகிப்பதற்கான அனைத்துக் தகுதிகளும் தனக்குள்ளதாக அவர் தெரிவித்துவருகின்றார்.