உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/17/2014

| |

விமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில், இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தால் 10கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்கள்,  5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) காலை முதல் சுமார் மூன்றுமணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கை சுதந்திர ஊழியர்சங்கத்தைச்சேர்ந்த ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், புதன்கிழமை காலை முதல் விமான நிலையத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது.

10,000 ரூபாய் கொடுப்பனவு, வைத்திய காப்புறுதி, 4 சதவீதம் அனர்த்த கடன், பியா புத்து மன்றத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு, பாதுகாப்பு பிரதானி தொடர்பில் விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.