11/20/2014

| |

ஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதற்கமைய இவர்கள் ஐவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும் சிறைச்சாலையிலிருந்து குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் நேற்று கையளிக்கப்பட்டனரெனவும் அவர் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த மனிதாபிமான நடவடிக்கையை பாராட்டுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இரு நாட்டுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு ஹெரோயின் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப் பட்டு பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இவர்களிடமிருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டி ருந்தன. இவர்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எமர்சன், பி.ஒகஸ்டர்ஸ், ஆர்.வில்சன், கே.பிரசாத் மற்றும் ஜே.லங்லட் ஆகிய ஐவருக்குமே மரணதண்டனை விதிக்கப்பட்டது.
மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் விடுவிக்குமாறு இந்தியத் தரப்பிலிருந்து தொடர்ந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், வேலைநிறுத்த போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
இந்த மரணதண்டனை தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு கோரியும், இவர்களை விடுவிக்குமாறு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன் றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், பிறிதொரு நாட்டில் வழங்கப் பட்ட தீர்ப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியாது என உயர்நீதி மன்றம் கூறியதைத் தொடர்ந்து இந்த மனு மீளப்பெறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் விடுதலை செய்வதில் இந்தியா இராஜதந்திர மட்டத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டி ருந்தது. சட்டத்துக்கு உட்பட்ட வகையில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந் தாலும் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என இலங்கை தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே நேற்று இந்த ஐந்து மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொதுமன் னிப்பு வழங்கினார்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்குத் திருப்பியனுப்பு வதற்காக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டனர். இவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் பணிகளை கொழும் பிலுள்ள இந்திய உயர்ஸ்தானி கராலயம் மேற்கொண்டுள்ளதாக தூதரக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த ஐந்து மீனவர்களின் விடுதலை யானது நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு இராஜதந்திர ரீதியில் கிடைத்திருக்கும் வெற்றியென இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருக்கின்றன.