உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/24/2014

| |

பொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு

பொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்புகொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், பொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன
“இது எவ்வித திட்டங்களும் அற்ற ஓர் அமைப்பாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, நிறைவேற்று பிரதமர் நாற்காலியில் ரணில் விக்ரமசிங்கவை அமர வைக்க போகின்றனராம். அப்படியென்றால், மைத்திரிபால சிறிசேனவின் நாற்காலி என்ன? நாற்காலி பிரச்சினையொன்றும்உள்ளது. இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் சிரமமான விடயமாகும். கிராமங்களிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் இன்று நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.”
அமைச்சர் பவித்திரா வன்னிஆரச்சியும் அங்கு கருத்து வெளியிட்டார்.
“மைத்திரிபால சிறிசேன என்ற நபர், ரணில் விக்ரமசிங்கவை அதிகாரத்திற்கு கொண்டு
வருவதற்கான ஓர் காய் மாத்திரமே. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை காட்டிக் கொடுத்து, எமது கட்சியிலுள்ள
எந்தவொரு நபரும் எதிர்வரும் காலத்தில், அவர்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதனை
அமைச்சரவையிலுள்ள அமைச்சர் என்ற ரீதியில் நான் உறுதியாக கூறிக் கொள்கின்றேன்.”
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.
“கட்சி தொடர்பில் இதுவரை ஓர் வேலைத்திட்டம் கிடையாது. ஜனாதிபதித் தேர்தல் என்பது
இலகுவான ஓர் விடயமல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு
முன்பிருந்தே தயாராக வேண்டும். ஆனால் தேர்தல் ஒன்றுக்கு தயாராவதற்கு
சுமார் 46 நாட்கள் மாத்திரமே  அவர்களுக்கு  இருக்கின்றது.  இது இலகுவான விடயமல்ல.”
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து வெளியிடுகையில்.
“கடந்த காலங்களில் சந்திரிகா, அதிகாலை வேளையில் தூதரகங்களுடன் தொலைபேசியில்
உரையாடியதை எங்களால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பொது வேட்பாளர் என்பது இந்த
நாட்டுக்ேக புரியாத புதிராக காணப்பட்டது. தூதுவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே
இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுகின்றார் என்பதனை நாங்கள் அறிந்திருந்தோம். 40
பேர் வருவதாக கூறினார்கள். முதலில் 20 பேரின், பெயரை வெளிப்படுத்துவதாக கூறினார்கள்.
அதிகாலையிலிருந்து தொலைபேசியூடாக அழைப்புக்களை மேற்கொண்டார்கள். யாரும் வரவில்லை.
மிக சிரமத்திற்கு மத்தியில் 6 பேரை தமது கட்சியுடன் இணைத்துக் கொண்டார்கள். அவ்வாறு
சென்ற 6 பேரில் இருவர், மீண்டும் இந்த பக்கம் வந்து அமர்ந்துக் கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றும் கிடையாது. அந்த பக்கம் சென்றவர்கள் தற்போது கவலையடைந்துள்ளனர்.”