11/30/2014

| |

ஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி

அரபு வசந்தத்தின் போது 2011இல் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொன்றமை குறித்த வழக்கின் மீள் விசாரணையில் இருந்து எகிப்திய நீதிமன்றம் ஒன்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்குக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நீக்கியிருக்கிறது.
முபாரக்கின் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் மீதான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த வழக்கில் முன்னாள் அதிபர் முபாரக்குக்கு நீதிமன்றம் ஒன்று ஆயுள் சிறை விதித்தது.
ஆனால், வழக்கு நடத்தப்பட்ட முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அது மீள்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
முபாரக் மற்றும் அவரது மகன்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊழல் குறித்த இன்னுமொரு வழக்கில் இன்னும் சில மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருப்பதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக மாட்டார்.