உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/30/2014

| |

தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்திரியின் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் கையெழுத்திடவுள்ளன. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் மாதுளுவாவே சோபித தேரர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால  சிறிசேன ஆகியோர் உரையாற்றவுள்ளனர். உடன்படிக்கையில், மாதுளுவாவே சோபித தேரர், கிராம்பே ஆனந்த தேரர், அத்துரலியே ரத்ன தேரர், தீனியாவெல  பாலித தேரர், ரீ செல்டன் பெர்னாண்டோ, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா, மனோ கணேசன், சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அர்ஜுன ரணதுங்க, அசாத் சாலி, ஹமால் நிலங்க, ஆரியவன்ஸ திஸாநாயக்க, சாமிலா பெரேரா, அருண சொய்ஸா, லால் விஜயநாயக்க ,ராஜ உஸ்வெட்ட கெய்யா, ஸ்ரீமஸ்ரீ கப்பு ஆராய்ச்சி, சமன் ரத்னபிரிய, சுசின் ஜயசேகர, எல்மோ பெரேரா, நிர்மல் ரஞ்ஜித் தேவசிறி, நந்தன குணதிலக்க, சந்திரசேன விஜயசிங்க ஜே.எஸ். குருப்பு, தாம் விமலசேன, நஜாம் முகம்மட், கெமுனு விஜயரட்ண, பேர்சி விக்ரமசேகர, சிரால் லக்திலக ஆகியோர் கையெழுத்திடவுள்ளதாக தெரியவருகின்றது.