11/12/2014

| |

கசிந்தது தகவல்! ரணிலின் மனைவி களத்தில்

sunethra-bandaranayaka-maitree-wikramasingheஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாவிட்டால்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் சகோதரி - சுனேத்திரா பண்டாரநாயக்க அல்லது ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் பொதுவேட்பாளராக போட்டியிடும் திட்டம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

கொழும்பு பீச்வெலி விருந்தகத்தில் இடம்பெற்ற இரவு விருந்துபசாரம் ஒன்றின் போது இது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இரண்டு பெண்களும் பொது வேட்பாளர் நிலைக்கு பொருத்தமானவர்களாக இருபரென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மைத்திரி விக்ரமசிங்கவும் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் கடுமையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரினதும்ஐக்கிய தேசியக் கட்சியினரினதும்ஆதரவை திரட்டக்கூடியவர்கள்அத்துடன் சிறுபான்மையினரிடம் வாக்குகளுக்காக கோரிக்கைகளை விடுக்கக் கூடியவர்கள்அத்துடன் பெண்கள் மத்தியிலும் அவர்கள் இருவரும் வாக்குகளை சேகரிக்கக் கூடியவர்கள்.
இந்தநிலையில் குறித்த இருவரும் நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பதவிக்கு வந்து மாத காலப்பகுதிக்குள் நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பது என்று இணக்கம் வெளியிட்டுள்ளனர்.