உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/17/2014

| |

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்கு மேற்பட்டோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளன

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 250க்கு மேற்பட்டோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர். 


திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.விக்னேஷ்வரன் தலைமையில்  திங்கட்கிழமை (15) விநாயகபுரம் 2ம்,3ம் கிராமங்கிளில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன.இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமார் 250 க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன முன்னிலையில் வெற்றிலை கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.இதன்போது கருத்து தெரிவித்த மக்கள்,   'யுத்தத்தை முடித்து எமது நாட்டில் அமைதிமையை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அத்துடன் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களை மீள அபிவிருத்தி செய்வதுடன் எமது இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி தரவேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர்