12/11/2014

| |

எமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அவர்களைத் தண்டிக்கவோ ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன்,” என்று மைத்ரிபால சிறிசேன

இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற போரின்போது ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

“போரின்போது அப்பாவிப் பொதுமக்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டது உண்மைதான். ஆனாலும் அதற்காக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அவர்களைத் தண்டிக்கவோ ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன்,” என்று மைத்ரிபால சிறிசேன இன்று கண்டியில் இடம்பெற்ற தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் போரின் போது அப்பாவிப் பொது மக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதற்கும் மிக அதிகமான தொகையினர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நச்சுப் பசளையினால் கொல்லப்பட்டுள்ளதாக அங்கு தெரிவித்த அவர், மஹிந்த மற்றும் அவரது சகோதரர்களும், குடும்பத்தினரும் அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களையும் சூறையாடி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய அரசும் எப்படியாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் எனப் பகற்கனவு கண்டுகொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு நடக்குமாயின் அதன் கடும் பிரதிவிளைவுகளை மஹிந்தவும், அவரது சகோதரர்களும் சந்திக்கவும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும்  மைத்திரிபால சிறிசேன இன்று எச்சரித்திருக்கிறார்.