12/14/2014

| |

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விடுக்க மனோ கணேசன் யார்?

வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்காக கோரிக்கை எதனையும் முன்வைக்காது

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு தமிழருக்கு கட்டளை விடுக்க மனோ கணேசன் யார்?

தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர் தம்பிராசா சீறிப் பாய்ச்சல்
தமிழ் மக்களது நியாயபூர்வமான கோரிக்கைகள் எதனையுமே ஏற்காது, அது தொடர்பாக தமது விஞ்ஞாபனத்தில் எதனையுமே தெரிவிக்காது போனாலும் கூட பரவாயில்லை, தமிழ் மக்கள் கட்டாயமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற மனோ கணேசனின் நிலைப்பாடு முற்றிலும் தவறானதாகும்.
இத்தகையதொரு கோரிக்கையை விட மனோ கணேசனுக்கு எந்தவிதமான ஆணையையோ அல்லது தகுதியையோ தமிழ் மக்கள் வழங்கவில்லை. வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது 50 வருட கால பிரச்சினையை முழுமையாக அறிந் திராத மனோ கணேசன் அத்தமிழ் மக்களது விருப் பறியாது இத்தகையதொரு கருத்தினைப் பகிரங்கமாகப் பத்திரிகைகளில் வெளியிடுவது முற்றிலும் தவறான விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணி யின் முக்கியஸ்தரான தம்பி முத்து தம்பிராசா தெரிவித் துள்ளார்.
அத்துடன் மனோ கணேசன் தான் பிரதி நிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் விருப் பைக்கூட அறியாது அம் மக்களுக்காக ஒரு கோரிக் கையையும் முன் வைக்காது தன்னிச் சையாகத் தனது விருப்பம் போல கருத்துத் தெரிவித்திருப்பது மேலும் வேதனையைத் தருகிறது. இதனை அவர் தெரிந்து கொள்கிறாரா அல்லது அரசியலுக்காக செய்கிறாரா என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கிகிருந்தால் என்ன, மலையகத்தில் இருந்தால் என்ன, கொழும்பில் இருந்தால் என்ன அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அந்தளவிற்கு அரசியல் கற்பிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. உண்மையா கவே நியாயபூர்வமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு தங்களது சுய விருப்பத்தின் பேரில் தீர்மா னிப்பார்கள் எனவும் தம்பிராசா தெரிவித்தார்.
நான் பிரதேச வாதமாகப் பேசுவதாகச் சிலர் எண்ணலாம். அது தவறு. நான் பொதுவாகவே கூறுகின்றேன். எவரும் யாரையும் கட்டாயப்படுத்தி, பொய்களைக் கூறி இன்னாருக்கு வாக்களிக்குமாறு கோருவது தவறு. அதிலும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான சலுகைகளை வழங்க மறுக்கும் பொது வேட்பாளருக்கு வாக்களிக் குமாறு மனோ கணேசன் கொருவது மாபெரும் தவறு எனவும் அவர் கூறினார்.
அரசியல் திர்வு சம்பந்தமாக எதுவும் கூறப்படத் தேவையில்லை என்று பகிரங்க மாக மனோ கணேசன் தெரிவித்ததை வன்மை யாகக் கண்டிப்பதுடன், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி திரு மனோகணேசன் கூற முடியாது எனவும் தம்பிராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஒரு பொழுதும் மனோ கணேசன் போன்றவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக என்றுமே இருக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் தகுதி நிறைந்த அரசியல் ஞானத்துடன், சாணக்கியம் நிறைந்த ராஜதந்திரம் மிக்க அரசியல் தலைமைகளையும் காலம் காலமாகக் கொண்டிருந்தவர்கள். இன்றும் கொண்டிருப்பவர்கள் என்பதை திரு. மனோ கணெசன் அவர்கள் என்றைக்கும் மறந்துவிடக் கூடாது.
ஆனாலும் ஆயுதப் போராட்டம் மெளனிக் கப்பட்டதன் பின்னரான காலகட்டங்களில் நடைபெற்ற சில போராட்டங்களில் மனோ கணேசனது பங்களிப்பை மறுப்பதற்கில்லை. அதற்காக அவர் கூறுவதுதான் வேத வாக்கு என்பதாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் அவசியம் தமிழ் மக்களுக்கு இல்லை எனவும் தம்பிராசா தெரிவித்தார்.