12/14/2014

| |

லயன்களுக்கு பதிலாக தனித் தனியான வீடுகள்

தோட்ட தொழிலாளிகள் தற்போது வாழும் குடியிருப்பு தொகுதிகளுக்கு பதிலாக தனி வீடமைப்பு திட்டம் இம்மாதம் 19ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண் டமான் தெரிவித்தார்.
வீடமைப்புக்கான முதலாவது திட்டத்தின் படி டயகம வெளர்லி தோட்டத்தில் 100 தனித் தனி வீடுகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வேலையின் நிர்மாணத்துறைகள் செய்யப்படும்.
இந்த அமைக்கப்படும் 100 வீட்டில் 25 வீடுகள் டயகம தோட்டத் தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தகுந்த இடத்தை குறித்த தோட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டதுடன் மேற்படி இடத்தை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிக ளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தை பார்வையிடுவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அங்கு விஜயம் ஒன்றை வியாழக்கிழமை மேற்கொண்டனர்.