உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/16/2014

| |

மைத்திரி மூளையில்லாத முட்டாள்! சந்திரிக்கா

santhirikaபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலையில் மூளையில்லாத முட்டாள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தன்னிடம் தெரிவித்தார் என புதிய சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சந்திரிக்கா கூறியதாக மங்கள தெரிவித்த முட்டாளை எப்படி ஜனாதிபதி பதவியில் அமர்த்த முடியும். அது ரகசியமானது.
முட்டாளை ஜனாதிபதியாக்குவது அவரை அந்த பதவியில் அமர வைப்பதற்கல்ல. மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்றதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் எனக் கூறினாலும் அப்படி நடக்க போவதில்லை.
சந்திரிக்காவே பிரதமராக நியமிக்கப்படுவார். அதற்கான இரகசியமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால்இதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.