12/22/2014

| |

கிழக்கின் விடிவுக்கு வித்திட்ட ஜனாதிபதி மஹிந்த இன ஒற்றுமைக்கு வழி கோலினார்

நாட்டு மக்கள் மீது அதிக அன்பு செலுத்தும் தலைவர் ஒரு காலத்திலும் இந்த நாட்டில் இருந்தது கிடையாது. அவர் நல்ல தந்தையை போன்றவர். கிழக்கு மக்கள் அவரின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து அக்கரைப்பற்று பஸ்தரிப்பிடத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மேலும் கூறியதாவது,
இப்பிரதேச மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என விரும்பிய அவரை 2005ல் ஆதரவு வழங்கினோம்.
2010 இலும் நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. சில சக்திகள் அவரை வீழ்த்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயல்கின்றன.
பொய் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தும் ஜனாதிபதி குறித்து தவறான கருத்துக்களை பரப்பியும் வருகின்றனர். ஜனாதிபதி நல்ல தந்தையை போன்றவர் 80 வீதமான சிங்கள மக்கள் அவருக்கு வாக்களிக்க உள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க தயாராகியுள்ளனர்.
இதுபோன்ற நாட்டு மக்கள் மீது அன்பு வைத்துள்ள தலைவர் ஒரு காலத்திலும் இருந்தது கிடையாது. அவரின் வெற்றிக்கு ஒத்துழைப்போம்.
அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க:
35 வருடங்கள் ஐ.தே.க. செயற்பாட்டு உறுப்பினராக கட்சி செயலாளராக இருந்த நான் ஏன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்தேன் என பலரும் வினவுகின்றார். ஜனாதிபதி தெளிவான நோக்குடன் செயற்படுகிறார். சகல இனத்தவருடனும் இணைந்து செல்லக்கூடிய நோக்கு அவருக்குள்ளனது. கொள்கை ரீதியில் நான் அரசாங்கத்தை அதிகமாக விமர்சித்துள்ளேன். எமது விமர்சனங்களை உள்வாங்கி அதிலுள்ள சரியானவற்றை அவர் செயற்படுத்தி வருகிறார்.
தனது 3 வது பதவிக்காலத்தில், ஒழுக்கம், சட்ட ஒழுங்கை சரிவர செயற்படுத்த பாடுபடுவதாக அவர் கூறினார். நாமும் இதற்காகவே போராடுகிறோம் அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தேன். ஒவ்வொரு தேர்தலிலும் பிரதான அரசியல் கட்சி வேட்பாளரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் ஐ.தே.க. தனது வேட்பாளரை நிறுத்தாமல் வேறு கட்சி வேட்பாளரை முன்னி றுத்தியது பண்டாரநாயக்கவின் சிலைக்கு தேடித் தேடி மாலையிடும் மைத்திரிபால ஏன் ஐ.தே.க.வை உருவாக்கிய டி.எஸ். சேனாநாயக்கவுக்கு வாக்களிக்க முன்வரவில்லை.
ஜனாதிபதியுடன் ஒப்பிடுகையில் போட்டியாக வந்துள்ள மைத்திரிபால ஓர் எலியைப் போன்றவர் எனவே சகலரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்போம்.
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை
30 வருட யுத்தம் காரணமாக நிம்மதியின்றி தவித்தோம். அதற்கு முடிவு கட்டிய ஜனாதிபதிக்கு நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் அதாவுல்லா 2010ல் முஸ்லிம்களை கோரினார். ஆனால் சில முஸ்லிம் தலைமைகள் அதற்கு எதிராக செயற்பட்டன முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான காணிகள் பறிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் பங்களிப்பினால் அவை மீள கிடைத்துள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிராக சில சம்பவங்கள் நடைபெற்றன.
ஐ.தே.க. தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை மு.கா. அவருடன் சேராது என தலைவர் அஷ்ரப் கூறியிருந்தார். ரணில் முஸ்லிம்களின் வரலாற்று எதிரி.
ஜனாதிபதியின் ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மெளலான:
ஜனாதிபதியின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளியாக இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கான தீர்வுஇந்த தேர்தலினூடாக ஏற்படும் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுடன் சிறந்த உறவை பேணி வருகிறார்.
எமக்கு சமூகமும் பெரும்பான்மை சமூகமும் ஒற்றுமையாக வாழவும் முஸ்லிம்களின் உரிமைகளை வெல்லவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் பாங்கை வானொலியில் ஒலிக்கச் செய்வதர் அவர்.
முஸ்லிம்களின் உரிமைகளை பெறவும் எதிர்காலத்தில் மேலும் சேவைகள் பெறுவும் ஜனாதிபதியை ஆதரிப் போம். முஸ்லிம்கள் அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்த ஜனாதிபதி உறுதியளித்திருகிறா