உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/05/2014

| |

லெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு

லெனின் மதிவானத்தின் நூல் விமர்சன நிகழ்வு

எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி, கொழும்பு 58, தர்மராஜ வீதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில்(WERC), திரு. லெனின் மதிவானம் எழுதிய சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வை புதிய பண்பாட்டுத் தளம் அமைப்பினர் ஒழுங்கமைத்துள்ளனர். பேராசிரியர் தை. தனராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மறைந்த இடதுசாரி இயக்க முன்னோடி தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் துணைவியார் திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் பிரதம அதிதியாக கலந்துக் கொள்வார்.  போரசிரியர் சோ. சந்திரசேகரம், இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் ஆகியோர் சிறப்புரை வழங்க மலைய சமூக ஆய்வாளர், தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. எம் வாமதேவன்,சமூக செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான கலாநிதி. ந. இரவீந்திரன், பாக்கியா பதிப்பகத்தின் நிறுவகர் மல்லியப்புச் சந்திதிலகர் ஆகியோர் விமர்சன உரையாற்றுவார்கள். ஏற்புரையை நூலாசிரியர் வழங்குவார்.