உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/05/2014

| |

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள் நிம்மதியாகவாழ்கின்றார்கள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் மக்கள்   நிம்மதியாக வாழ்வதாகவும் இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்திலுள்ள பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற  பரிசளிப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் அச்சத்துடன் நம்பிக்கையில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவந்தோம். ஆனால்,  இந்த  நிலைமை மாற்றப்பட்டு, நம்பிக்கையுடன் வாழ்வதற்குரிய சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கித்தந்துள்ளார். அவ்வாறான தலைவருடன் நாம் தொடர்ந்து பயணித்தால், எமது இலக்கை நாம் அடையமுடியும் என்பது எனது எதிர்பார்ப்பு. 

மேலும், இன்று சிறு கிராமங்கள் தோறும் பிள்ளைகள் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ள அரசாங்கம் என்றால், அதுவும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே. இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவேண்டும் என்பது எமது உறுதியான முடிவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நூறு நாட்களில் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்று. ஜனாதிபதி முறையை ஒழிப்பதா இன்று தமிழர்களின் பிரச்சிரச்சினையாகவுள்ளது?

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தானாக கருத்துக் கூறினால்  பரவாயில்லை. அவர்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் விசுவாசத்துக்காகவே  கூறுகின்றார்.

தமிழர்களை பொறுத்தவரையில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவேண்டுமாக இருந்தால், தமிழர்களுடைய தீர்வுத்திட்டத்தில் ஏதாவது தருவதாகவும் பேசியிருந்தால் பரவாயில்லை' எனக் கூறினார்.
- See more at: http://www.makkalinkural.lk/2014/12/blog-post_81.html#sthash.s9XuDcx9.iHVxA7Vl.dpuf