12/05/2014

| |

எழிலன் கடத்திச் சென்ற பிள்ளைகள் எங்கே? அனந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எல்.ரி.ரி.ஈ. யின் உறுப்பினராகவிருந்த எழிலனால் பிடித்துச்செல்லப்பட்ட பிள் ளைகள் எங்கே எனக் கோரி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவு வாழ் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று நடத்தியிரு ந்தனர்.
அனந்தியின் கணவரான எழிலனால் பிடித்துச்செல்லப் பட்ட தமது பிள்ளைகள் எங்கே என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு சங்க சந்தியில் நடைபெற்றது.
எழிலன் என அழைக்கப்பட்ட சசிந்திர னால் பாடசாலைகளில் கல்விகற்றுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகள் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தில் சேர்ப்பதற்கென கடத்திச்செல்லப்பட்டனர்.
அவ்வாறு கடத்திச்செல்லப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது எழிலனின் மனைவி என்ற ரீதியில் அனந்திக்குத் தெரியும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வர்கள் தெரிவித்தனர். அனந்திக்கு எதிரான ஸ்லோகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், சசிந்திரனின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கும் நிலையில் முல்லைத்தீவிலுள்ள வர்களின் பிள்ளைகள் மாத்திரம் பயங்கரவாதத்தில் சிக்குண்டு பாதிக்கப்படுவதா என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கேள்வியெழுப்பினர்.
நாட்டிலுள்ள அப்பாவி தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தவர்கள் கொல்லப்படு வதற்குக் காரணமாகவிருந்த தனது கணவர் குறித்துப் பேசுவதற்கு அனந்திக்கு அருகதையில்லையென்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமெழுப் பியிருந்தனர்.