உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/05/2014

| |

நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கு பின்னர், சாம்பல்தீவில் வைத்து  அவரை கைது செய்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

சாம்பல்தீவு மற்றும் நிலாவெளியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் இவர் தேடப்பட்டுவந்துள்ளார்.

38 வயதான இவர், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டார் உள்ளிட்ட மத்தியக்கிழக்கு நாடுகளில் தங்கியிருந்து இலங்கைக்கு திரும்பிய அவர், சாம்பல் தீவில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்த போதே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.