உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/11/2015

| |

10 வயது சிறுமி மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் பலி -

நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் சிறுமி ஒருவர் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்கொலை தாக்குதலை 10 வயதுடைய சிறுமி ஒருவரே மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பொர்னோ மாகாணத்தின் மைடுகுரி நகரத்திலுள்ள சந்தை தொகுதியில் இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி தனது உடலில் குண்டுகளை பொருத்தியிருந்த நிலையில் அவற்றை வெடிக்க செய்ததாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை பொக்கோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கலாம்  என சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/137459#sthash.OVx9cVP8.dpuf