1/27/2015

| |

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

புதிய அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தில் தங்களது பிரச்சினைகளையும் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன் கவன ஈர்ப்பு பேரணியும் நடாத்தப்பட்டது.மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.2011ஆம் ஆண்டு பட்டதாரிகள் நியமனத்தில் உள்ளீர்க்கப்படாதவர்கள் மற்றும் 2012,13,14ஆம் ஆண்டு பட்டப்படிப்பனை நிறைவுசெய்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.“ஏமாற்றாதே,ஏமாற்றாதே”,”புதிய பிரதமரே வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தாருங்கள”;,”பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதிபெற்றுத்தாருங்கள”; போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்க பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.