1/03/2015

| |

ஏளனத்துக்காகவே பிரபாகரனை யாழில் 'மிஸ்டர்' என்று கூறினேன்

சந்திரிகா கொழும்பில் தெரிவிப்பு

எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் பிரபாகரனுக்கு ‘மிஸ்டர் பிரபாகரன்’ என ஏளனத்துக்காகவே தான் கூறியதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் தெரிவித்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணத்தில் “மிஸ்டர் பிரபாகரன்” எனக் கூறியபோது, அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர்.
அவர் “மிஸ்டர் பிரபாகரன்” எனக் கூறிய வேளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன சிரித்துக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார். சந்திரிகாவின் ஆட்சியில் ஆனையிறவு முல்லைத்தீவு பகுதி எல்.ரீ.ரீ.ஈ. வசம் சென்றது. கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலால் பில்லியன் கணக்கில் சேதம் ஏற்பட்டது. எண்ணெய் தாங்கி தாக்குதல், மத்திய வங்கி தாக்குதல், தலதா மாளிகை தாக்குதல் சந்திரிகா நிர்வாகத்தில் நடந்த நிகழ்வுகளாகும்.
அவரின் ஒரு கண்ணை இழந்து வெடித்த குண்டுத் தாக்குதலும் இயலுமானால் மிஸ்டர் பிரபாகரனைக் கொண்டு செய்த வேடிக்கை என அவருக்கு இன்று கூற இயலும்.
இத்தகைய ஏளனங்கள் பலவானவற்றை அவர் தெற்கில் செய்துள்ளார் என்பதை இன்றும் செய்கிறாரா? என சிந்திப்பதற்கு மக்களுக்கு இப்போது வாய்ப்பு உரு வாகியுள்ளது.
தனது தந்தையைக் கொலை செய்வதற்கும் செயற்பட்ட பிரபாகரன் என்ற கொடும் பயங்கரவாதிக்கு “மஹத்மயா” எனக் கூறுபவர்களில் சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க போன்றோரும் இருப்பது எவ்வாறு என ராவணா பலய அமைப்பு வினா எழுப்பியுள்ளது.
“விமான நிலையத்தை மூடுவோம்” எனக்கூறி மறுநாள் “விமான நிலையத்தை மூட எனக்கு என்ன பைத்தியமா?” எனக் கேட்ட பொது வேட்பாளரின் குழு முழு இலங்கை மக்களதும் ஏளனத்துக்கும் ஆளாகி இருப்பதும் தெரிகிறது. (