1/07/2015

| |

கூட்டமைப்புக்குள் குழப்பம் வெடிக்கிறது வன்முறை

அனந்தியினுடைய பகிஸ்கரிப்பு கோரிக்கையை ஒட்டி கட்சிக்குள்  அவருக்கு எதிராக முறுகல் நிலை ஏற்பட்டு வருகின்றது. இதனால் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதியொருவரின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தேர்தல் வன்முறைச் சம்பவமாகும். இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிவஞானம் தெரிவித்தார்.