1/05/2015

| |

எஸ்.பொ நிழலில் சிந்தித்த நிகழ்வின் சுருக்கம்

நேற்று ( 04-01-2015) பிற்பகல் சரியாக நான்கு மணிக்கு எஸ்.பொ நிழலில் சிந்திக்கும் தினம் ஆரம்பமானது. தமிழ் படைப்பிலக்கிய கொடு முடியான எஸ்.பொ அவர்கள் குறித்து பல்வேறு பரிமாணங்களில் உரையாடப்பட்டது. 13 பேச்சாளர்களில் தவிர்க்கமுடியாத சூழலால் இருவர் நிகழ்விற்கு சமூகமளிக்க முடியவில்லை. மற்றைய 11 பேச்சாளர்களும், தமது தலைப்புகளுக்கு அமைய சுருக்கமாகவும் சுவையாகவும் உரையாற்றினார்கள். நிகழ்விற்கு முன்னீடு வழங்கிய தேவதாசன் தனது வரவேற்புரையுடன் எஸ்.பொ அவர்களை தனது சிறு பராயத்திலேயே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த அனுபவத்தையும் 86ம் ஆண்டு கலாமோகனின் நட்பின் மூலமாக பிரான்சில் சந்தித்த அனுபவத்தையும் எடுத்துரைத்தார். கற்சுறா அவர்கள் அனுப்பிய காட்டானுக்கெனது செய்தி யை விஜி அவர்கள் வாசித்தார்.’ வணக்கம். எஸ்.பொ வுக்கு நினைவு தினம் உலகம் எங்கிலும் நடைபெறுகிறது. இரண்டு நினைவுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது சந்தோசமே. எஸ்.பொ தீ எழுதினார்,எஸ்.பொ சடங்கு எழுதினார், நனவிடை தோய்தல் எழுதினார் என்பதெல்லாம் சரி. ஒரு எழுத்தாளனாக எஸ்.பொ அவர்கள் சாதித்தார். எழுத்தை கை மீறிப்போகச் செய்தவர் அவர். நமக்கு எழுத்திற்குள் அத்து மீறி நுழைவதற்குகான வழியைக் காட்டியவர். அத்துணிச்சலில்தான் கனடா வந்திருந்த போது அவரைக் கூட்டிவந்து அவர் நெஞ்சிலே பாய்ந்தேன்” என்று தொடங்கியது கற்சுறாவின் செய்தி.10887908_917218024956871_27914617_n10922216_917218011623539_2099226756_n10922022_917218608290146_1833910152_n10922012_917214238290583_1056884553_n10921976_917219194956754_1824213897_n10921686_917218634956810_1179300724_n10921677_917219381623402_1076795483_n10921663_917219921623348_1987455543_n10918834_917214208290586_1227506766_o10917651_917218264956847_997035894_n10917606_917219158290091_454679957_n10917560_917214594957214_523417481_n10913534_917218831623457_141788148_n10904821_917219274956746_1427463170_n10904262_917214464957227_2129533025_n10904147_917214351623905_2015096022_n10904141_917214524957221_119693583_n10887908_917218024956871_27914617_n10872463_917218504956823_1984930648_n10841634_917214411623899_1038939490_nDSC00323DSC00320DSC00311DSC00302DSC00293
எமது தமிழ் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றதென்று நாம் கருதினால் அது எழுத்துத் துறையிலும் படைப்பிலக்கியத்திலும் தான் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றதென்பேன். அந்த வெளிசசத்திற்காக 55 வருடங்களுக்கு முன்பே “தீ’ வைத்தவர் எஸ்.பொ அவர்கள். அவர் இரண்டு விதமான தீ யை கொழுத்தியவர். எழுத்தாளர் மாநாட்டிற்கு சுடலைத் “தீ” எனும் முதல் கொள்ளி வைத்தவர். இருளடைந்த இலக்கியத்துக்கு வைத்த அவரது “தீ” யும் அவர் வைத்த சுடலைத் “தீ” யும் ஒன்றல்ல என்ற வகையில் அசுரா  தனது பேச்சில் குறிப்பிட்டார். எஸ்பொ.அவர்களின் படைப்பிலக்கியத்தின் ஆளுமைகளையும், அவரது எழுத்து மகிமை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் துரைசிங்கம் அவர்கள். எஸ்.பொ ஒரு கலகக்காரன் என்ற தலைப்பில் பேசிய தோழர் அந்தோனிப்பிள்ளை அவர்கள். முன்பு எஸ்.பொ வின் படைப்புகள் குறித்த அனுபவம் இல்லாது போனாலும், அவரை தேடி படிக்கும் ஆவலுக்கு இந்த நிகழ்வும் காரணமாக அமைந்தது. இலக்கியத்தில் மட்டுமல்லாது அரசியல் முரண்பாடுகளிலும் அவர் ஒரு கலகக்காரனாகவே இருந்திருக்கிறார் என்பதை என்னால் உணரக் கூடியதாக இருப்பதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் திருமணம் செய்த சம்பவம் குறித்தும், ராசதுரை எம்பிக்கும் எஸ்.பொ வுக்கும் நிகழ்ந்த முரண்பாடுகள். தமிழரசுக் கட்சியின் அரசியில் போலித்தனங்கள் மீது எஸ்.பொ முன்வைத்த விமர்சனங்கள் போன்ற பல்வேறு விடயங்களை எம்.ஆர். ஸ்ராலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
என்ன தான் இலக்கிய ஆளுமை இருப்பினும் அவர் அதிகார சாதிய யாழ் மேலாதிக்க சிந்தனைக்கு சேவை செய்யும் அரசியல் சிந்தனை கொண்டவராக என்னால் பார்க்கமுடிகிறது எனும் வகையில் தனது பார்வையை முன்வைத்தார் இரஜாகரன் அவர்கள். நீண்ட காலத்திற்கு பிற்பாடு நண்பன் கலாமோகன் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து உரையாற்றிய அதிசய சம்பவம் நடந்தது. தனக்கும் எஸ்.பொவிற்குமான எழுத்து உறவு, ஆபிரிக்க நாவல்களை எஸ்.பொ தமிழுக்கு மொழிபெயர்த்த பயன் பாடுகள், அவரது ஆங்கில மொழி ஆளுமை குறித்தெல்லாம் கலாமோகன் பேசினார்.
நனவிடை தோய்தல் எனும் தலைப்பில் உரையாற்றிய புஸ்பராணி அவர்கள் தனது நினைவுகளிலும் தோய்ந்து கொண்டிருந்தார். எஸ்.பொவின் வட்டார மொழி வழக்குகளை மிக சுவாரசியமாக இரசித்து மகிழ்ந்ததாக குறிப்பிட்டார். நனவிடை தோய்தல் எனும் நாவலில் உள்ள பல்வேறு சொற்களையும், சம்பவங்களையும் வாசித்து பார்வையாளர்களையும் மகிழ்வித்தார்.
தனது சிறுபராயத்திலேயே பாடப் புத்தகத்திலே வரும் கதைகளை தேடித் தேடி படிக்கும் ஆவல் உள்ளவனாக இருந்தவன். அவ்வாறாக நான் படித்த கதைகளெல்லாம் எஸ்.பொ அவர்கள் தான் எழுதியது என்பதை பல அண்டுகளின் பிற்பாடே என்னால் அறிய முடிந்தது. எஸ்.பொ ஒரு இல்லக்கிய துரோணாச்சாரியார். நான் அவருக்கு ஏகலைவனாக இருந்தேன்.  பேட்டிகாணும் போதும் அவருடன் விடுதலைப் புலிகள் குறித்து பேசியபோதும் நிகழ்ந்த முரண்பாடுகள் பலவற்றையும் ஷோபாசக்தி தனது உரையில் குறிப்பிட்டார். இறுதியாக உரையாற்றிய மனோ அவர்கள் எஸ.பொ வின் நூல்களை தொடர்ந்து நாம் படிக்க வேண்டும். அவரது நூல்களை வாசிப்பு மனநிலை விவாதத்திலும் நாம் எடுத்து விவாதிக்கவேண்டும். எனவும் வலியுத்தினார்.
நேரம் போதாமையால் கலந்துரையாடலில் பலராலும் பங்கு பற்ற முடியாது போனது. இருப்பினும் தோழர் வன்னிய சிங்கம் அவர்கள் எஸ்.பொ மக்கள் சார்ந்த அரசியல் நிலைப்பாடு இல்லாதவர். இலக்கியத்தில் ஆளுமையுள்ளவராக இருப்பினும் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பது மிக அவசியமானது என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்விற்கு பல சிங்கள நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கான மொழி பெயர்ப்பு தொகுப்பை சரவணன் அவர்கள் வழங்கினார். சரவணன் அவர்களுக்கும் நிகழ்விற்கு வருகை தந்தவர்களுக்கும், உரையாற்றிய அனைவருக்கும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.