1/04/2015

| |

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கும்பல் ஒன்று அத்துமீறி ரவுடித்தனத்தில்

கிளிநொச்சி கந்தபுரத்தில் இடம்பெற்ற சட்டரீதியாக பொலிஸ் அனுமதி பெறப்பட்டு தேர்தல் விதி முறைகளுக்கு அமைவாக நடத்தப்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கும்பல் ஒன்று அத்துமீறி ரவுடித்தனத்தில் ஈடுபட்டு குழப்பம் விளைவித்தமையினை தொடர்ந்து கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் சுமூகமாக நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேசங்கள் தோறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை ஆதரித்து ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. உரிய முறைப்படி கூட்டம் நடத்தப்படுகின்ற இடத்திற்கான அனுமதி,ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளிட்ட தேர்தல் விதி முறைகளுக்கு அமைவாக கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கூட்டம் ஆரம்பமாகிய நிலையில் கூட்டத்தை குழப்பும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சர்வாணந்தா,கட்சி உறுப்பினரும் அக்கராயன் மகா வித்தியாலய ஆசிரியருமான கதிர்மகன்,அதே பாடசாலை ஆசிரியர் தவசீலன்,மற்றும் கட்சியின் கந்தபுரம் அமைப்பாளர் கரன் ஆகியோர் அடங்கிய கும்பல் ஒன்று கூட்டம் இடம்பெற்ற இடத்தில் ஆரம்பம் முதல் குழப்பத்தை ஏற்படுத்தி இடையூறு விளைவித்ததோடு பெருமளவு மக்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் நாகரீகமற்ற சொற்பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மேற்படி கும்பலின் ரவுடித்தனம் தொடர்பில் பொலிஸாருக்கும், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சி அமல்ராஜ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தமையினை அடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் உள்ளிட்ட மேலதிக பொலிஸார் கந்தபுரத்திற்கு வரவழைக்கப்பட்டு கூட்டம் சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்டது. அத்தோடு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரும் உரிய இடத்திற்கு விரைந்திருந்தார்.
ஆசிரியர்களாக, பிரதேச சபை உறுப்பினர்களாக இருக்கின்ற இவர்களின் அநாகரீகமான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியதனையும் அவதானிக்க முடிந்தது.