உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/09/2015

| |

மக்களின் மாற்றத்திற்கு தலை வணங்குகின்றோம்.TMVP

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் அளித்துள்ள ஜனநாயக ரீதியிலான தீர்ப்பினை ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்றமுறையில் மதிப்பளித்து அத் தீர்ப்பிற்கு தலைவணங்குகின்றோம். மாற்றம் வேண்டும் என்ற தேசிய அலையில் தமிழ் மக்களும் உள்வாங்கப்பட்டு சில யதார்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டு எம் மக்கள் அளித்துள்ள மாற்றத்திற்கான இத் தீர்ப்பானது எம் மக்கள் எதிர்பார்க்கின்ற அம் மாற்றத்தினை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விலும், அபிவிருத்தியிலும் ஏற்படவேண்டும் என நாமும் விரும்புகின்றோம்.
மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மத்தியில் எம் கட்சிக்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமக்காக வாக்களித்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 35,000 ஆயிரம் தமிழ் வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், அவர்களின் தலைமையின்கீழ் தேசிய அரசாங்கத்தின் பிரதமராக பதவிவகிக்க இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அமைய இருக்கின்ற தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அமைச்சுப் பதவிகளை ஏற்று இணக்கப்பாட்டு அரசியலினூடாக தமிழ் மக்களுக்கு காத்திரமான சேவையை ஆற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
-நன்றி-
பூ.பிரசாந்தன்
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி