உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/10/2015

| |

குமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டாம்: நீதிமன்றம்

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல்குழு உறுப்பினரான குமார் குணரத்னத்தை நாடு கடத்தவோ கைது செய்யவோ வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவ்வாறு செய்வது சட்டவிரோத செயல் என உத்தரவிடும்படியும் முன்னிலை சோஷலிச கட்சி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், குமார் குணரத்னத்தை எதிர்வரும் 13ஆம் திகதிவரை நாடு கடத்த வேண்டாமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
- See more at: http://www.tamilmirror.lk/139479#sthash.8Qhz4SEj.dpuf