உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/02/2015

| |

திஸ்ஸ அத்தநாயக்க கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க, சற்று முன்னர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார். அவரை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று போலி ஆவணமொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.